மேலும் 195 இலங்கையர் நாடு திரும்பினர்…!

கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 195 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இன்று (25) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 8 விமான சேவைகள் மூலம் இவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்களில் 75 பேர் சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பினர்…!

இதேவேளை மேலும் 659 பேர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது.

இதில் 277 பேர் சவூதி அரேபியாவை நோக்கி பயணமாகியுள்ளனர்.

Related posts