பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு..!!

பாணந்துறை வடக்கு பொலிஸ் பகுதியில் உள்ள பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தொிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த நபர் படுகாயமடைந்தார்.

இதனை அடுத்து பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர்கள் தொடர்பாக பாணந்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts