தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு..!!

முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரமைப்பு பணிகளின்போது, போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த எறிகணைகளை இனங்கண்ட வேலையாட்கள், முள்ளியவளை பொலிஸ் நிலைத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர், வெடிபொருள் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டுள்ளார்கள்.

மேலும், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சட்ட நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு, குறித்த வெடிபொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts