சீனாவில் தங்க சுரங்கத்தில் சிக்கிய 22பேரில் 11பேர் பத்திரமாக மீட்பு..!!

வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், காணாமல் போன 10 பேர் சுரங்கத்தின் இரண்டாயிரம் அடிக்கு கீழ் சிக்கி கொண்டுள்ளதாகவும், இவர்களை மீட்க மேலும் 2 வாரங்களாகும் எனவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கடலோர ஷாண்டோங் மாகாணத்தில் யந்தாய் பிராந்தியத்தில் தங்கம் உற்பத்தி செய்யும் முக்கிய சுரங்கத்தில் ஜனவரி 10ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் இருபத்தி இரண்டு தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.

ஐந்தில் ஒரு சுரங்க தொழிலாளி இறந்துவிட்ட நிலையில் 11பேர் தொடர்பான தகவல் மீட்புக் குழுக்களுளுக்கு கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீதமுள்ள தொழிலார்களை மீட்பதற்கு இன்னும் இரு வாரங்கள் ஆகலாம் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts