இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மூவரடங்கிய குழு நியமனம்…!

இந்திய மீனவர்கள் இந்நாட்டு கடல் எல்லையை ஆக்கிரமிப்பது தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டு கடல் எல்லையில் இந்திய மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கான பரிந்துரைகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகுமென தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்

ரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஸ்பேஸ்எக்ஸ் சாதனை..!!

விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த பால்கன்-9 ரொக்கெட் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ரொக்கெட்டில் 143 சிறிய ரக செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டன. இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் 2017ஆம் ஆண்டு 104 செயற்கைக் கோள்களை ஒரே ரொக்கெட்டில் விண்ணில்…

மேலும்

பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு..!!

பாணந்துறை வடக்கு பொலிஸ் பகுதியில் உள்ள பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தொிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த நபர் படுகாயமடைந்தார். இதனை அடுத்து பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி…

மேலும்

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று உறுதியானோரில் 151 பேர் சிகிச்சையில்..!!

கொரோனா தொற்று உறுதியாகிய சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 151 பேர் தற்போது தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் 146 பேர் கைதிகள் என்றும் ஐந்து பேர் சிறைச்சாலைகள் அதிகாரிகள் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகளுக்குள் இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 4,396 ஆக உள்ளது. அவர்களில் 4,234…

மேலும்

சீனாவில் தங்க சுரங்கத்தில் சிக்கிய 22பேரில் 11பேர் பத்திரமாக மீட்பு..!!

வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதேசமயம், காணாமல் போன 10 பேர் சுரங்கத்தின் இரண்டாயிரம் அடிக்கு கீழ் சிக்கி கொண்டுள்ளதாகவும், இவர்களை மீட்க மேலும் 2 வாரங்களாகும் எனவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கடலோர ஷாண்டோங் மாகாணத்தில் யந்தாய் பிராந்தியத்தில் தங்கம் உற்பத்தி செய்யும்…

மேலும்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் மாபெரும் ட்ராக்டர் பேரணி..!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிா்த்து மகாராஷ்டிர மாநில விவசாயிகள் இன்று (திங்கட்கிழமை) மாபெரும் பேரணியை நடத்தவுள்ளனா். இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மகாராஷ்டிரம் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மத்திய அரசு தன்னிச்சையாக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிா்த்து மகாராஷ்டிர விவசாயிகள் மும்பை ஆஸாத் மைதானத்தில் மிகப்பெரிய…

மேலும்

இந்தியா, சீனாவிற்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை..!!

கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனாவுக்கிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. கிழக்கு லடாக்கில் சீன எல்லைக்கு உள்ளிட்ட  மோல்டோ எல்லைப் பகுதியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், துணைத் தளபதி பிஜிகே மேனன் தலைமையிலான இராணுவ அதிகாரிகள் குழு பங்கேற்றது. இதன்போது எல்லையில் படைகளை விரைவாக திரும்பப் பெறுவது பதற்றத்தை ஏற்படுத்தும்…

மேலும்

ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது – காஞ்சன விஜயசேகர..!!

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். மாத்தறை பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார். முதலாவது அலையை முடக்க கட்டுப்பாடுகள்…

மேலும்

தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்பு..!!

முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரமைப்பு பணிகளின்போது, போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த எறிகணைகளை இனங்கண்ட வேலையாட்கள், முள்ளியவளை பொலிஸ் நிலைத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர், வெடிபொருள் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டுள்ளார்கள். மேலும், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சட்ட…

மேலும்

‘வலிமை’ தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிடும் டீசர்!

தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் தெரிந்ததே. வரும் பிப்ரவரி மாதத்துக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதன்பின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின்…

மேலும்