போதைப்பொருள் நிரப்பப்பட்ட டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிப்பு..!!

வெலிகந்த – கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் நேற்று இரவு வெளிப்புறத்திலிருந்து எறியப்பட்ட போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தனி நபரொருவரால் அல்லது குழுவொன்றினால் குறித்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் பாவனைக்காக இவ்வாறு போதைப்பொருள் நிரப்பப்பட்ட டென்னிஸ் பந்துகள் எறியப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.

குறித்த டென்னிஸ் பந்தினுள் ஹெரோயின் மற்றும் கஞ்சா நிரப்பப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தொிவித்துள்ளார்.

Related posts