கொரோனா தொற்று: பிரித்தானியாவில் 3.6 மில்லியனைத் தாண்டியது..!!

பிரித்தானியாவில் 3.6 மில்லையனுக்கும் அதிகமான கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணிநேரத்தில் 33 ஆயிரத்து 552 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதுடன் 1,348 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36 இலட்சத்து 17 ஆயிரத்து 459 ஆக உயர்ந்துள்ளதுடன் இறப்பு எண்ணிக்கை 97 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது.

உலகளவில் கொரோனா தொற்று பதிப்பில் பிரித்தானியா 5 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts