கடமையை பொறுப்பேற்க அனுமதிக்காத ரோயல் கல்லூரியின் அதிபர்..!!

கொழும்பு ரோயல் கல்லூரிக்கு ஆசிரியராக இடமாற்றம் செய்யப்பட்ட  தேரர் ஒருவருக்கு அந்த பாடசாலையின் அதிபர், கடமையை பொறுப்பேற்க அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அம்பலங்கொட தம்மலங்கார தேரர் பல சந்தர்ப்பங்களில் கல்வி அமைச்சகத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்திருந்தாலும்,அதற்கு உரிய தீர்வு கிடைக்காத காரணத்தினால் குருந்துவத்தை காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த தேரர் கடமைகளை ஏற்றுக்கொள்வதற்காக கடந்த 11 ஆம் திகதி கொழும்பு ரோயல் கல்லூரிக்கு வருகை தந்துள்ளார்.

அதிபர் கடமையை பொறுப்பேற்க அனுமதிக்காததால் அவர் கல்வி அமைச்சிற்கு சென்றுள்ளதுடன், பாடசாலைக்குச் சென்று தனது கடமைகளை மீண்டும் தொடங்குமாறு அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தேரர் கடமைகளை ஏற்க மீண்டும் 12 ஆம் திகதி ரோயல் கல்லூரிக்குச் சென்றுள்ளார்.

எனினும், அதிபர் அவரை கடமையை பொறுப்பேற்க அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லையென கூறி தேரரை  கடமையை பொறுப்பேற்க அனுமதிக்கவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts