கொரோனா தொற்றுக்கு உள்ளான சுகாதார அமைச்சர் பசிலுடனான கூட்டத்திலும் பங்கேற்பு..!!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அமைச்சர் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள அதேவேளை, சுகாதார அமைச்சு வளாகம் மூடப்பட்டதுடன், பணியாளர்கள் சுய தனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சுடன் தொடர்புபட்ட பொது சுகாதார…

மேலும்

WHOஇன் தகவலின்படி இலங்கை அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது – GMOA..!!

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி இலங்கை கொரோனா தொற்றாளர் வீதத்தில் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா வீதமானது 5.5 விளிம்பு நிலை வீதத்தைக் கடந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் ஹரித அளுத்கே கூறியுள்ளார் இந்த நேர்மறை வீதமானது ஒரு மாதத்துக்கு முன்பாக 3.0 மட்டத்தில்…

மேலும்

ஐரோப்பாவில் கொரோனா தொற்று நிலவரம்..!!

ஐரோப்பாவில் கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, உலகளவில் அதிக தொற்று அடையாளம் காணப்பட்ட நாடுகளில் 6 ஆவது இடத்தில் இருக்கும் பிரான்சில் இதுவரை 30 இலட்சத்து 35 ஆயிரத்து 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 72 ஆயிரத்து 877 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்…

மேலும்

2 ஆவது ஒருநாள் போட்டி: அப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகள் மோதல்..!!

அப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. அபுதாபியில் நடைபெறும் இப்போட்டியில் அப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸும் அயர்லாந்து அணிக்கு ஆண்ட்ரூ பல்பீர்னி தாலமி தாங்கவுள்ளனர். மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் அப்கானிஸ்தான் அணி 16 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. இந்நிலையில் 1-0 என்ற அடிப்படையில் தொடரில் அப்கானிஸ்தான்…

மேலும்

கொரோனா தொற்று: பிரித்தானியாவில் 3.6 மில்லியனைத் தாண்டியது..!!

பிரித்தானியாவில் 3.6 மில்லையனுக்கும் அதிகமான கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணிநேரத்தில் 33 ஆயிரத்து 552 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதுடன் 1,348 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36 இலட்சத்து 17 ஆயிரத்து 459 ஆக உயர்ந்துள்ளதுடன் இறப்பு எண்ணிக்கை 97…

மேலும்

ஸ்டாலினுக்கு கடவுள் வரம் கொடுக்க மாட்டார்- எடப்பாடி பழனிசாமி..!!

தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவையில் இரண்டாவது நாளாக பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினை இவ்வாறு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். குறித்த பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மேலும் கூறியுள்ளதாவது, “தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்க…

மேலும்

கடமையை பொறுப்பேற்க அனுமதிக்காத ரோயல் கல்லூரியின் அதிபர்..!!

கொழும்பு ரோயல் கல்லூரிக்கு ஆசிரியராக இடமாற்றம் செய்யப்பட்ட  தேரர் ஒருவருக்கு அந்த பாடசாலையின் அதிபர், கடமையை பொறுப்பேற்க அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அம்பலங்கொட தம்மலங்கார தேரர் பல சந்தர்ப்பங்களில் கல்வி அமைச்சகத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்திருந்தாலும்,அதற்கு உரிய தீர்வு கிடைக்காத காரணத்தினால் குருந்துவத்தை காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இடமாற்றம் செய்யப்பட்ட குறித்த தேரர் கடமைகளை…

மேலும்

போதைப்பொருள் நிரப்பப்பட்ட டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிப்பு..!!

வெலிகந்த – கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் நேற்று இரவு வெளிப்புறத்திலிருந்து எறியப்பட்ட போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தனி நபரொருவரால் அல்லது குழுவொன்றினால் குறித்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் பாவனைக்காக இவ்வாறு போதைப்பொருள் நிரப்பப்பட்ட டென்னிஸ் பந்துகள் எறியப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்…

மேலும்

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு பொருளாதார தடை..!!

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு பொருளாதார தடை விதிப்பது போன்ற பரிந்துரைகளை உள்ளடக்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்சிலெடினால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கைக்கு பதிலளிக்க ஜனவரி 27 வரை கால அவகாசம் உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இதேவேளை…

மேலும்