4 இந்திய மீனவர்களின் உடல்கள் கடலோர காவல்படையிடம் ஒப்படைப்பு ..!!

இலங்கை கடற்படை கப்பல் மோதி கொல்லப்பட்ட 4 இந்திய மீனவர்களின் உடல்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

நடுக்கடலில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி, தமிழக மீனவர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர்

குறித்த 4 பேரின் உடல்களும் இலங்கை கடற்கரையில் ஒதுங்கியிருந்த நிலையில் யாழ் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, காங்கேசன்துறை கடற்படை முகாமில் நேற்றிரவு கொண்டு வரப்பட்டன.

இதனை அடுத்து சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர், 4 பேரின் உடல்களையும் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

Related posts