மாஸ்டர்’ படத்தின் 10 நாட்கள் வசூல்: மொத்த வசூல் இத்தனை கோடியா..?

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் வசூலிலும் சாதனை செய்து கொண்டு வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ஆடியன்ஸ்களும் கடந்த சில நாட்களாக திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். இதனால் இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் 10 நாள் உலக அளவிலான வசூல் ரூபாய் 205 கோடி என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 105 கோடி வசூல் செய்து உள்ளது என்பதும் அதில் சென்னையில் மட்டும் 8 கோடி வசூல் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கேரளாவில் ரூபாய் 11 கோடியும், கர்நாடகாவில் ரூபாய் 16 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரூபாய் 24 கோடியும் வட இந்தியாவில் ரூபாய் 4 கோடியும் வெளிநாடுகளில் ரூபாய் 45 கோடியும் இந்த படம் வசூல் செய்துள்ளது

மேலும் பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் வேறு எந்த பெரிய திரைப்படங்களும் ரிலீஸ் ஆகாததால் உலக அளவில் கடந்த சில நாட்களில் மிக அதிக வசூல் செய்த திரைப்படம் ’மாஸ்டர்’ படம் தான் என்று விஜய் ரசிகர்கள் பெருமிதமாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts