பிரான்ஸில் கொவிட்-19 தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் மூன்று இலட்சத்து 11ஆயிரத்து 257பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை கொவிட்-19 தொற்றினால் 72ஆயிரத்து 647பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 23ஆயிரத்து 292பேர் பாதிக்கப்பட்டதோடு 429பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 27இலட்சத்து 22ஆயிரத்து 788பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 912பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை இரண்டு இலட்சத்து 15ஆயிரத்து 822பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Related posts