‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு ஏற்பட்ட இரண்டாவது ஏமாற்றம்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ’குக்குகளை கோமாளிகள் அதிக அளவு காமெடி செய்து வருகின்றனர் என்பதும் கோமாளிகளான புகழ், ஷிவாங்கி, பாலா, மணிமேகலை, சரத், உள்ளிட்டவர்களுக்கு தற்போது சமூக வலைதளங்களில் ஆர்மிகள் தொடங்கி விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது

நான்ஸ்டாப் காமெடி நிகழ்ச்சியாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியை திரும்பத் திரும்ப பலர் பார்த்து வருவதால் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே நிகழ்ச்சி காரணமாக ஞாயிறு அன்று ரத்து செய்யப்பட்டது. இதனால் குக் வித் கோமாளி ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்

அதேபோல் இந்த வாரமும் ஞாயிறு அன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொடக்க விழா காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடர்ச்சியாக ஒன்பது மணி நேரம் ஒளிபரப்பாக இருப்பதால் இந்த வாரமும் ஞாயிறு அன்று ’குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ’குக் வித் கோமாளி ரசிகர்கள் இரண்டாவது வாரமாக ஏமாற்றமடைந்துள்ளனர்

இனி வரும் வாரங்களிலாவது ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சனி ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் ஒளிபரப்பாக வேண்டும் என விஜய் டிவிக்கு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Related posts