இவ்வாண்டில் நாடளாவிய ரீதியாக யானைகளை கணக்கெடுப்பதற்கு திட்டம்..!!

இவ்வாண்டில் நாடளாவிய ரீதியாக யானைகளை கணக்கெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தொிவித்துள்ளார்.

நாட்டின் நாடளாவிய ரீதியான யானைகள் கணக்கெடுப்பு இறுதியாக 2011ம் ஆண்டு நடைபெற்றதாகவும் அதன்போது 5179 யானைகள் இலங்கையில் இருப்பதாகவும் தொியவந்துள்ளது.

எவ்வாறெனினும் 2019ம் ஆண்டில் இக்கணக்கெடுப்பு நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தபோதும் மழையுடனான காலநிலை காரணமாக அது செயற்படுத்தப்படவில்லை.

Related posts