நுவரெலியா-வலப்பனை பகுதியில் நில நடுக்கம்..! அதிர்ச்சியில் மக்கள்

நுவரெலியா-வலப்பனை பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. புவியியல் மற்றும் சுரங்கப்பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் 1.8 றிச்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்

மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய மூன்று பேர் கொண்ட குழு நியமனம்..!

இலங்கையில் நடைப்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராயவும், அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பரிந்துரைகளை வழங்கவும் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி நவாஸ் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

மேலும்