ஹட்டன் பிரதேசத்தில் பாடசாலையொன்றில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்றுறுதி…!

ஹட்டன் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரு ஆசிரியருக்கும், இரண்டு மாணவர்களுக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி 10 ஆம் வகுப்பில் கல்வி கற்ற ஒரு மாணவருக்கு கொரோனா தொற்றுறுதியானதையடுத்து 38 மாணவர்கள் மற்றும் 4 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதன் போது எடுக்கப்பட்ட பி சி ஆர் பரிசோதனையின் போதே குறித்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இருவரும் கொரோனா தொற்றுறுதியானவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

Related posts