நாளை முதல் விமான நிலையங்கள் மீள் திறப்பு!

நாளை முதல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம் ஆம் திகதி சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

எனினும், முதற்கட்டமாக அண்மைய சில நாட்களாக யுக்ரைனில் இருந்து சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கான சட்டத்திட்டங்கள் தளர்த்தப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டுக்கு பிரவேசிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் சுற்றுலா பயணிகள் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts