கடந்த 24 மணித்தியாலங்களில் முககவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாத 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹாண இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத 2 ஆயிரத்து 665 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் சுமார் 2 ஆயிரத்து 500 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றாது செயற்பட்ட ஆயிரத்து 50 நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.