வட கொரியாவுடனான உறவை அமெரிக்கா மேம்படுத்திக் கொள்ள வேண்டும்: தென்கொரியா ஜனாதிபதி!

வட கொரியாவுடனான உறவை அமெரிக்கா மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்துதெரிவித்த அவர், ‘அணு ஆயுதங்கள் விவகாரத்தில் சுமுகத் தீர்வை எட்டுவதற்கு வட கொரியா தயாராக உள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவும் வட கொரியாவும் கலந்து பேசி உடன்பாட்டை எட்ட வேண்டும். இரு நாடுகளும் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வது வீண் அச்சங்களைப் போக்கும்.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் அரசாங்கம் மேற்கொண்ட தவறுகளிலிருந்து பைடன் அரசாங்கம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்’ என கூறினார்.

கடந்த காலங்களில் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம், வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுடன் நல்லுறவைத் தொடர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டபோதும் அது தோல்வியிலேயே முடிந்தன.

இந்தநிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பைடன் நாளை பதவியேற்கவுள்ள நிலையில், தென்கொரியா ஜனாதிபதி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

Related posts