வசூல் மழையில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிலம்பரசனின் ஈஸ்வரன்…

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ம் தேதியும், சிம்புவின் ஈஸ்வரன் 14ம் தேதியும் திரையரங்கில் வெளியானது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு படங்கள் திரையரங்கில் வெளியாவதால் மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

ரிலீஸ் ஆனதில் இருந்து இரண்டு படங்களுக்குமே வசூலில் எந்த குறையும் இல்லை. சென்னையில் 6 நாட்கள் முடிவில் மொத்தமாக மாஸ்டர் படம் ரூ. 6.1 கோடி வசூலித்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமாக மாஸ்டர் ரூ. 88 கோடியும், ஈஸ்வரன் ரூ. 7.8 கோடியும் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts