குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் விமானங்கள்..!!

குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு தினம் இம்மாதம் 26 ஆம் திகதி நடைபெறுகிறது. இதன்போது  இந்திய விமானப்படையின் 38 போர் விமானங்களும், இராணுவத்தின் 4 விமானங்களும் விண்ணில் அணிவகுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முதன்முறையாக  இந்த ஆண்டு ரஃபேல் போர் விமானங்கள் இடம் பெறப்போவதாக விங் கமாண்டர் இந்திரானில் நந்தி தெரிவித்துள்ளார்.

‘வெர்டிகல் சார்லி பார்மேஷன்’ என்று சொல்லப்படுகிற வகையில் ஒற்றை விமானமாக இந்த ரஃபேல் போர் விமானம் குறைவான உயரத்தில் பறந்து மேலே செல்லும்.  அது அதிக உயரத்தில் நிலைபெறுவதற்கு முன்பாக சாகசங்களை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஃபேல் போர் விமானம், பிரான்ஸ் நாட்டில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts