கமல்ஹாசன் உடல்நிலை குறித்து ஸ்ருதிஹாசன்-அக்சராஹாசன் வெளியிட்ட அறிக்கை!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் நடத்தி கொண்டு தேர்தல் பிரசாரமும் செய்து கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.

இந்த நிலையில் ஏற்கனவே நடந்த விபத்து ஒன்றில் காலில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் இதனால் தேர்தல் பிரசாரத்திற்கு தற்காலிக ஓய்வு எடுத்திருப்பதாகவும் அறிக்கை ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டு இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இன்று காலையில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி அவர்களது ஒருங்கிணைப்பில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன் குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக உற்சாகத்துடன் இருக்கிறார். அப்பாவை மருத்துவர்களும் மருத்துவமனை நிர்வாகமும் நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்கு பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களை சந்திப்பார், மகிழ்விப்பார். அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

Related posts