ஏ.ஆர்.ரஹ்மானுக்காக சிறப்பு வீடியோவை வெளியிட்ட ‘பத்து தல’ டீம்!

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ‘பத்து தல’ திரைப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைக்க இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியானது என்பதும் நேற்று வெளியான ‘பத்து தல’படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஏஆர் ரஹ்மான் உடன் இணைவதில் பெருமை கொள்வதாக ‘பத்து தல’ படக்குழுவினர் தற்போது சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் ஏஆர் ரஹ்மான் குறித்து இயக்குநர்கள் பாலச்சந்தர், மணிரத்னம், பாரதிராஜா, கவிஞர்கள் வைரமுத்து, வாலி, இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட சிலர் பேசிய கருத்துக்கள் உள்ளது. மேலும் இந்த வீடியோவில் ’எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று ஆஸ்கார் விருது வாங்கியபோது ஏஆர் ரஹ்மான் கூறிய வசனங்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பத்து தல’ திரைப்படத்தை இயக்குனர் கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார் என்பதும் இவர் ஏற்கனவே இயக்கிய ’சில்லுனு ஒரு காதல்’ என்ற திரைப்படத்திற்கும் ஏஆர் ரஹ்மான் தான் இசையமைத்தார் என்பதும் 14 வருடங்களுக்கு பின் மீண்டும் ஏஆர் ரஹ்மான் மற்றும் இயக்குனர் கிருஷ்ணா ‘பத்து தல’ படத்தில் இணைகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts