இயக்குனர் சங்கரின் அடுத்த படபிடிப்பு…. பிரபல நடிகரின் பிரம்மாண்ட படம்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!

இயக்குனர் சங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்பட படபிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த படத்திற்கு இயக்குனர் தயாராகிவிட்டார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் என்றாலே ரசிகர்களிடம் தனி எதிர்பார்ப்பு இருக்கும். இதன்காரணமாகவே சங்கர் தமிழ் இந்திய திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், இவர் இயக்கி வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் என்ற தகவல் வெளிவந்தது.

அந்த படத்தில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் ராம்சரண் ஹீரோவாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும் நடிக்கிறார். இந்நிலையில் தெலுங்கில் ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படமானது இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்புகள் முடிந்து பிரம்மாண்டமாக வெளியாகும் என ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts