சுயதனிமைப்படுத்தலில் கல்வி அமைச்சர், சுகாதார அமைச்சியில் பலருக்கு கொரோனா ..!!

கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுடன் நெருங்கி பழகியதை அடுத்தே அவர் சுய தனிமையில் இருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (திங்கட்கிழமை) இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சுகாதார அமைச்சில் 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

fஅத்தோடு அவர்களுடன் முதல் தொடர்புடையோர் என்ற அடிப்படையில் 74 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts