இந்தோனேசிய நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 77 ஆக அதிகரிப்பு..!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது.

இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டடங்கள் கடுமையாக இடிந்து தரைமட்டமானது.

இந்த நிலநடுக்கத்தில் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்து தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர். அதேநேரம், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் பலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புக்குழுவினர் தொடர்ந்தம் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்புக்குழுவினர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய பலரை உயிருடன் மீட்டனர். இந்த நிலநடுக்கத்தால் 27 ஆயிரத்து 800 பேர் தங்கள் வீடுகளை இழந்தனர்.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 42 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளதாக இந்தோனேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, 820 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது.

Related posts