அஜித்தின் வலிமை பட டீஸர் வெளியாவது பற்றி வந்த தகவல்..!!

அஜித்தின் வலிமை பட படப்பிடிப்பு கொரோனா லாக் டவுன் முடிந்ததில் இருந்து வேகமாக நடந்து வருகிறது. படக்குழுவினர் அவ்வளவாக இடைவேளையே இல்லாமல் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள்.

வலிமை பட குழுவினர் அண்மையில் சில சண்டை காட்சிகளை படமாக்க குஜராத் சென்றதாக கூறப்பட்டது.

அண்மையில் வந்த தகவல் என்னவென்றால் அஜித் சின்ன இடைவேளையில் பைக்கிலேயே சிக்கிம் சென்றுள்ளதாக செய்திகள் வந்தன.

ரசிகர்கள் ஒன்றே ஒன்றை தான் அதிகம் எதிர்ப்பார்க்கிறார், அதாவது வலிமை பட அப்டேட்.

இந்த நேரத்தில் தான் வலிமை பட டீஸரை படக்குழு வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது

Related posts