இலங்கையில் இருந்து ஏதுமற்றவராய் துரத்தப்பட்ட தமிழர் அறத்தில் வாழ்கின்றனர்! விஜய் தணிகாசலம்..!!

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் அறம் சார்ந்து வாழ்கின்றனர் என கனடா – ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கலை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

“தமிழ் மொழி எமக்கு கற்றுக்கொடுத்த அறம் சார்ந்த வாழ்வியலை கைவிடாது வாழ்பவர்கள் நாங்கள்.

இன்று நாங்கள் உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்நாட்டு மக்களை எமது உறவுகளாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.

இன்று வணிகம், சமூகம், அரசியல் போன்ற துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு அடிப்படையானது நாம் தொடர்ச்சியாக கடைப்பிடித்து வரும் வாழ்வியல் முறையே ஆகும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts