வெளிநாடுகளிலிருந்து மேலும் 109 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

வெளிநாடுகளிலிருந்து மேலும் 109 இலங்கையர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டாரில் இருந்து 28 பேரும், அவுஸ்ரேலியாவில் இருந்து 44 பேரும், ஜப்பானில் இருந்து 37 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், ஜேர்மனி, மாலைத்தீவுகள், இத்தாலி மற்றும் பங்களாதேஷிலிருந்து மேலும் சிலர் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts