‘D43’ படத்தின் டைட்டில் குறித்து தனுஷின் டுவீட்..!!

நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள ’கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’ மற்றும் ஒரு பாலிவுட் திரைப்படம் என மூன்று திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது.

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தார் என்பது தெரிந்ததே. மேலும் இந்த படத்தில் சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது என்றும் முதல் நாள் படப்பிடிப்பில் பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடந்ததாகவும், ஜிவி பிரகாஷ் இசையில் தனுஷ் பாடிய இந்த பாடல் காட்சியை டான்ஸ் மாஸ்டர் ஜானி நடன இயக்குனராக பணியாற்றினார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ’D43′ படத்தின் டைட்டில் குறித்து தனது டுவிட்டரில் தனுஷ் கூறியபோது, ‘இந்த படத்தின் டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். அனேகமாக வரும் பொங்கல் தினத்தில் இந்த படத்தின் டைட்டில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts