இளம் நடிகரின் அடுத்த படத்தில் ‘பிக்பாஸ்’ சம்யுக்தா..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் திரையுலகில் வாய்ப்பை பெற்று வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சம்யுக்தா, கடந்த சில வாரங்களுக்கு முன் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் சம்யுக்தாவுக்கு ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்து வரும் ‘துக்ளக் தர்பார் என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இளம் நடிகர் ஒருவரின் அடுத்த படத்தில் சம்யுக்தா நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் நடிக்கும் அடுத்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளார் என்பதும் நீண்ட டைவெளிக்குப் பின் ஸ்ரீதிவ்யா இந்த படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சம்யுக்தா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் முன்னரே அந்நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவர் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கவிருப்பது பெரும் பாசிட்டிவிவாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் திருவல்லிக்கேணியை சேர்ந்த வாலிபராக கௌதம் கார்த்திக்கும் பிசியோதெரபி மருத்துவராக ஸ்ரீதிவ்யா நடித்து வருவதாக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts