இளம் நடிகரின் அடுத்த படத்தில் ‘பிக்பாஸ்’ சம்யுக்தா..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் திரையுலகில் வாய்ப்பை பெற்று வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சம்யுக்தா, கடந்த சில வாரங்களுக்கு முன் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் சம்யுக்தாவுக்கு ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்து வரும்…

மேலும்

‘D43’ படத்தின் டைட்டில் குறித்து தனுஷின் டுவீட்..!!

நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள ’கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’ மற்றும் ஒரு பாலிவுட் திரைப்படம் என மூன்று திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது. இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன்…

மேலும்

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 8,334பேர் பாதிப்பு- 210பேர் உயிரிழப்பு..!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் எட்டாயிரத்து 334பேர் பாதிக்கப்பட்டதோடு 210பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்து 35ஆயிரத்து 134பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 16ஆயிரத்து 579பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80ஆயிரத்து 288பேர் மருத்துவமனைகளில்…

மேலும்

அயர்லாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஐக்கிய அமீரக அணி வெற்றி..!

அயர்லாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், ஐக்கிய அமீரக அணி 6 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 1-0 என்ற கணக்கில் ஐக்கிய அமீரக அணி முன்னிலைப் பெற்றுள்ளது. அபுதாபியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில்…

மேலும்

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 68,053பேர் பாதிப்பு- 1,325பேர் உயிரிழப்பு..!!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 68ஆயிரத்து 053பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆயிரத்து 325பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 5ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், 29இலட்சத்து 57ஆயிரத்து 472பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை பிரித்தானியாவில் 79ஆயிரத்து 833பேர் வைரஸ்…

மேலும்

வவுனியா சாலையின் உதவி சாலை முகாமையாளரை இடமாற்றம் செய்தமைக்கு எதிராக பணிபுறக்கணிப்பு..!!

வவுனியா போக்குவரத்து சபையின் வவுனியா சாலையின் உதவி சாலை முகாமையாளரை இடமாற்றம் செய்கின்றமைக்கு எதிராக வவுனியா போக்குவரத்து சபையின் சாரதிகள், காப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இன்று (சனிக்கிழமை) காலையில் இருந்து பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள்  தெரிவித்துள்ளதாவது, “எந்தவித பிழையோ அல்லது காரணமோ இல்லாமல் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சாலை…

மேலும்

ஈழத்து இயக்குநர் கேசவராஜன் காலமானார்..!!

ஈழத்து திரைப்பட இயக்குநரான நவரட்ணம் கேசவராஜன், இன்று (சனிக்கிழமை) அதிகாலை நோய் காரணமாக காலமானார். அரியாலையை பிறப்பிடமாக கொண்ட கேசவராஜன், கண்டியில் தனது கல்வியை தொடர்ந்தார். பின்னர் சினிமா மீதான ஈர்ப்பினால் இயக்குநரானார். 1986ம் ஆண்டு தாயகமே தாகம், மரணம் வாழ்வின் முடிவல்ல போன்ற படங்களை இயக்கினார். அதன் விளைவாக தேசிய தலைவரின் பாராட்டை பெற்றதுடன்…

மேலும்

அபராதம் செலுத்த முடியாத அனைத்து கைதிகளுக்கும் விடுதலை – சிறைச்சாலைகள் திணைக்களம்..!!

சிறைச்சாலைகளுக்குள் நெரிசலைக் குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, அபராதம் செலுத்த முடியாத அனைத்து கைதிகளும் இன்று விடுவிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து கடந்த பல வாரங்களில் 10 ஆயிரத்து 65 சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களில் 60 விகிதமானவர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது…

மேலும்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது போராட்டம்- உண்ணா விரதத்தில் சில மாணவர்கள்..!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. மேலும் போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும் சில மாணவர்கள் உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும்…

மேலும்

தமிழ் இன எழுச்சியின் அடையாளத்தை அழிக்கும் செயலை முறியடிக்க வேண்டும்- மயூரன்..!!

தமிழ் இன எழுச்சியின் அடையாளமாக திகழும் நினைவு முற்றத்தை அழிக்க எத்தனிக்கும் எதிரிகளின் செயல்களை முறியடிப்பது, தமிழர்களின் கடமையாகுமென முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவிடம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு உடைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம்…

மேலும்