100% இருக்கை அனுமதி: ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

திரையரங்குகளில் கடந்த சில மாதங்களாக 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்த நிலையில் சமீபத்தில் 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணைக்கு ஒரு சில சமூக நல ஆர்வலர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசும் இந்த உத்தரவுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் இது குறித்த வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணை சற்றுமுன் நடைபெற்றது. இதில் வரும் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் அனைத்தும் 50 சதவீத இருக்கைகளுடன் தான் இயங்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் மத்திய, மாநில அரசுகள் பரிசீலனை செய்து வரும் திங்கட்கிழமைக்குள் நல்ல முடிவு எடுப்பார்கள் என நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர். அவ்வாறு இல்லை என்றால் நீதிமன்றமே இதுகுறித்து உத்தரவு பிறப்பிக்கும் எனவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி குறித்து நீதிபதிகள் பிறப்பித்த இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே தற்போதைய நிலையில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்றாலும் 11-ஆம் தேதிக்கு பிறகு இதே நிலை தொடருமா? அல்லது 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related posts