வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்..!!

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 261 இலங்கையர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவிலிருந்து 29 பேரும், கட்டாரிலிருந்து 30 பேரும், ஜப்பானிலிருந்து 45 பேரும், அவுஸ்ரேலியாவிலிருந்து 157 பேரும்,கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

இது தவிர மேலும் 365 பேர் இன்றைய தினம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைனிலிருந்து 159 பேரும், மாலைத்தீவிலிருந்து 30 பேரும், இத்தாலியிலிருந்து 32 பேரும், பங்களாதேஷிலிருந்து 10 பேரும், மலேசியாவிலிருந்து 05 பேரும், தென்னாப்பிரிக்காவிலிருந்து 35 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 75 பேரும், சிங்கப்பூரிலிருந்து 19 பேரும் இன்றைய தினம் வருகை தரவுள்ளனர்.

Related posts