முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.டி.பண்டாரநாயக்கவின் 122 ஆவது ஜனன தினம் இன்று..!!

மறைந்த முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.டி.பண்டாரநாயக்கவின் 122 ஆவது ஜனன தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதனை முன்னிட்டு காலிமுகத்திடலில் அமைந்துள்ள பண்டாரநாயக்க உருவச்சிலைக்கு முன்பாக அவரை நினைவு கூறும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் சுனேத்ரா குமாரதுங்க ஆகியோர் முதலில் மலர் தூவி, அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை  இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பண்டாரநாயக்க உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து,  அஞ்சலி செலுத்தினர்.

Related posts