முகக்கவசம் அணியாமல் நடமாடிய மூவருக்கு கொரோனா..!!

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து, ரபிட் ஆன்டிஜன் அல்லது பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்துகின்ற திட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டவர்களில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடிக் கொண்டிருந்த 377 பேர், நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களுள் 220 பேர் ஆன்டிஜன் பரிசோதனைக்கும், 157 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பிரசோதனையிலேயே மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மீன் கடைகள், மரக்கறிக் கடைகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களில் கொரோனா தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

Related posts