மட்டக்களப்பில் வாவி பகுதியில் கரையொதுங்கிய அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலம்..!!

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கடற்கரையை அண்டிய வாவி பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்படாத குறித்த சடலம் இன்றைய தினம் கரையொதுங்கியுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சடலத்தை பிரதே பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts