பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு தற்காலிகமாக பூட்டு..!!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் இந்த விடயம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பணியாளர் ஒருவர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related posts