ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் பெண் நடுவரானார் பொலோசக்..!!

அவுஸ்ரேலியாவை சேர்ந்த தொழில்முறை கிரிக்கெட் நடுவரான கிளாரி பொலோசக், ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் பணியாற்றிய முதல் பெண் நடுவர் என பெருமையை பெற்றுள்ளார்.

144 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டில், பெண் ஒருவர் நடுவராக பணி புரிவது இதுவே முதல் முறையாகும்.

சிட்னி மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், 32 வயதான கிளாரி பொலோசக், நான்காவது நடுவராக இணைந்தார்.

நான்காவது நடுவர் என்பது மாற்று நடுவர் போன்றது. அதனால் ஆடுகளத்தின் எல்லையில் இருந்தபடி, கிளாரி தனது பணியை கவனிக்கிறார்.

பெண்கள் போட்டிக்கான ஐ.சி.சி. நடுவராக பணியாற்றி வரும் கிளாரி பொலோசக்கு இன்னாள் மற்றும் முன்னாள் வீரர். வீராங்கனைகள் இரசிகர்கள் சமூகவலைதளங்களின் ஊடாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related posts