4 பிரிவுகளாக பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர வடவடிக்கை

இலங்கையில் விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர் 4 பிரிவுகளாக பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்கள் மீள திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே 4 பிரிவுகளாக பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள், இலங்கை மாணவர்கள், இலங்கை தொழிலாளர்கள் மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்கள் இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்துள்ளார்.

Related posts