பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த பிரதேச அதிகாரி பசில் வழங்கிய ஆலோசனை!

விவசாய உற்பத்திகளுக்கு பெறுமானத்தை சேர்ப்பதன் மூலம் உள்ளூர் விவசாயிகளை முன்னேற்ற முடியும் என பொருளாதார அபிவிருத்தி, வறுமையொழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவை விவசாயிகளுக்கு வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த பிரதேச அதிகாரிகளுக்கு இந்த ஆலோசனையை அவர் வழங்கினார்.

பெருந்தோட்டத்துறை மூலம் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது.

தேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் பெருந்தோட்டத் துறையை கிராமிய மட்ட மக்கள் மத்தியில் கொண்டு செல்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts