தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 11 வரை 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts