கிளிநொச்சியில் 35 மில்லியனில் விடுதி வசதிகளுடன் ஆயுா்வேத வைத்தியசாலை!

கிளிநொச்சியில் விடுதி வசதிகளுடன் கூடிய விசேட கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலை ஒன்று 35 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாண நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த ஆயுர்வேத வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளது.

குறித்த வைத்தியசாலையானது கிளிநொச்சி நகரில் கூட்டுறவு மண்டபத்திற்கு அருகில் ஏ9 வீதியோடு மாவட்ட பயிற்சி வள நிலையம் அமைந்துள்ள வளாகத்தில்  அமைக்கப்படவுள்ளது.

தற்போது பரந்தன் பிரதேசத்தில் பரந்தன் பூநகரி வீதியில் ஒரு ஆயுர்வேத வைத்தியசாலை இயங்கி வருகிறது.

Related posts