இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்களை சந்தித்தார் ஜெய்சங்கர்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நல்லெண்ண அடிப்படையில் இந்த சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

மலையகத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான இராஜாங்க அமைச்சரும் இ.தொ.க.வின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.க.வின் உப தலைவரும் பிரதமரின் இணைப்புச்செயலாளருமான செந்தில் தொண்டமான் மற்றும் இ.தொ.க.வின் நிதிச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரமேஷ்வரன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.

இதனையடுத்து இதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Related posts