ஜனாஸாக்களை புதைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்! மைத்திரி வலியுறுத்து..!!

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கின்ற நபர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசு அனுமதியளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களைப் புதைப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை உலக சுகாதார நிறுவனம் கூட கூறியிருக்கின்றது.

சிறுபான்மை மக்களின் மனங்களையும், உணர்வுகளையும் காயப்படுத்திவிட்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Related posts