2021 ஆம் வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று!

2021 ஆம் வருடத்தின் முதலாவது  நாடாளுமன்ற அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) கூடவுள்ளது.

இன்று மற்றும் 7 ஆம் திகதி ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும். சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணி வரை இடம்பெறும்.

எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி எதிர்கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  ஜனவரி 06 ஆம் திகதி முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரை பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஜனவரி 7 ஆம் திகதி, புலமைச் சொத்து (திருத்த) சட்ட மூலம் இரண்டாம் வாசிப்பு மற்றும் விமான நிலைய வரி உள்ளிட்ட 10 கட்டளைகள் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts