நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

கொழும்பு மாவட்டத்தின் முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மேலும் மூன்று பிரதேசங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய முகத்துவாரம் பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட புனித – என்றூஸ் வீதி, புனித – என்றூஸ் மேல் மற்றும் கீழ் வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நேற்றைய தினம்  அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் பெரும்பாலானோர் குறித்த பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

முகத்துவாரம் பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகள் நீண்ட நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts