அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி வவுனியாவில் போராட்டம்!

அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்ப்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா காமினி மகா வித்தியாலத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நீண்டகாலமாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.

தற்போது கொவிட்19 தாக்கத்திற்கு மத்தியில் அவர்கள் மிகுந்த பாதிப்புக்களை எதிர் நோக்கியிருக்கின்றனர்.

எனவே அவர்களது பிள்ளைகள், குடும்பத்தினரின் நலனையும் அவர்களது நலனையும் கருத்தில் கொண்டு ஜனாதிபதி அவர்களை விடுவிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘எமது உறவுகளை சிறைகளில் மடியவிட வேண்டாம்’, ‘தமிழ் அரசியல் கைதிகள் பயங்கவாதிகள் இல்லை’, ‘கைதிகளிற்கு பொது மன்னிப்பு வழங்கு’ போன்ற பாதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

Related posts