அத்துரலிய ரத்தன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம்

எங்கள் மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேசிய பட்டியலில் நாடாளுமன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட அத்துரலிய ரத்தன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு தேசியப் பட்டியல் ஆசனமொன்று கிடைத்திருந்த நிலையில், அந்த ஆசனத்துக்கான உறுப்பினரைத் தெரிவுசெய்வதில் தொடர்ந்து இழுபறிநிலை நீடித்தது.

அதன் பின்னர் எங்கள் மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அத்துரலிய ரத்தன தேரர் பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts