வவுனியாவில் கர்ப்பிணிப் பெண் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

வவுனியா – பட்டானிச்சூரில் வசித்த இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் மற்றையவர் 6 ஆம் ஒழுங்கையில் வசிக்கும் கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் என்பதுடன் அவருக்கான பரிசோதனை கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட போதே தொற்று உள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பட்டானிச்சூரை முடக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

இதுவரையில் கொரோனாவினால் 211 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts